சேலம் பிரபல ரவுடி கொலை வழக்கில் வசூர் ராஜா ஆத்தூர் கோர்ட்டில் சரண்
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). பிரபல ரவுடியான இவர் கிச்சிபாளையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சேலம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்டம் அலமேலு மங்காபுரம் புது வசூர் பகுதியை சேர்ந்த துளசி கோவிந்தராஜன் என்கிற வசூர் ராஜா (41) என்பவரை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் வசூர் ராஜா நேற்று மதியம் ஆத்தூரில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் சேலம் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் பலத்த பாதுகாப்புடன் வசூர்ராஜாவை அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story