பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:40 PM IST (Updated: 23 Feb 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம், 

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமானதாக கூறி அ.தி.மு.க., பா.ஜ.க., அரசைக் கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிரொலியாக இனி வருங்காலங்களில் அனைவரும் மாட்டு வண்டியை தான் பயன்படுத்தும் நிலைமை ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் மாட்டு வண்டியில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தனர்.

இதில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ., சி.வி.ஏம்.பி. ஏழிலரசன், தி.மு.க.நிர்வாகி வி.எஸ்.ராமகிருஷ்ணன், நெசவாளரணி நிர்வாகி தி.அன்பழகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய-மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூபதி தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் தி.மு.க.எம்.எல்.ஏ.,வி.ஜி. ராஜேந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர்கள் ஆர்.டி.இ. ஆதிசேஷன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், நிர்வாகிகள் சி.எச்.சேகர், அறிவழகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர். 

Next Story