மாவட்ட செய்திகள்

சலவைத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை + "||" + Suicide by fire

சலவைத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

சலவைத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சலவைத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணவேல் (வயது 34). சலவைத் தொழிலாளியான இவர் நேற்று மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், அவரது மனைவியையும், அவரது தாயையும் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி கதவை சாத்திக் கொண்டு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவியும், அவரது தாயாரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பலத்த தீக்காயம் அடைந்த சரவணவேலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணவேல் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் விபரீதம்
ஓட்டப்பிடாரம் அருகே செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. ஆட்டோவை பறிமுதல் செய்ததால் விரக்தி: நெல்லையில் நிதி நிறுவனத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
4. வேலை இல்லாத விரக்தியில், மகனுடன் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை; ஈமசடங்கிற்கு ரூ.3 ஆயிரம் வைத்து சென்ற சோகம்
வேலை இல்லாத விரக்தியில் மகனுடன் சிவில் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்தார். ஈமசடங்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் வைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.