வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


web photo
x
web photo
தினத்தந்தி 24 Feb 2021 12:47 AM IST (Updated: 24 Feb 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், சின்னநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தியும்(வயது 49), திருச்சி மணக்கால் பழைய தெருவை சேர்ந்த காத்தான் (57) ஆகிய இருவரும் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் முதல் கருவிடைகுறிச்சி சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் விடுதியின் அருகில் கீழப்பழுவூர் அண்ணா நகரை சேர்ந்த மாதவன் (40) என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவர் மீதும் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாலும், அவர்கள் வெளியில் வந்தால் குற்றச் சம்பவங்களில் ஈடுபட கூடும் என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின்பேரில், சத்தியமூர்த்தி, காத்தான் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள காத்தான், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story