குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Feb 2021 1:35 AM IST (Updated: 25 Feb 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் கண்ணாரப்பாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 63830 71800, 93845 01999 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொண்டனர்.
1 More update

Next Story