வேம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


வேம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:39 AM IST (Updated: 25 Feb 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

வேம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த இடையார் கிராமத்தில் உள்ள வேம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் யாக சாலை அமைக்கப்பட்டு முதற்கால யாக பூஜைகள், விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாகனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை, திரவியஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை ஆகியவை நடந்தது. பின்னர் நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜைகள், விநாயகர் வழிபாடு, சூரிய சந்திர பூஜை, லட்சுமி பூஜை, நாடிசந்தானம், மூலமந்திர ஹோமம், திரவிய ஹோமம், வேதிகா அர்ச்சனை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 9-30 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
1 More update

Next Story