காஞ்சீபுரம் அருகே, லாரி மோதி கட்டிட மேஸ்திரி சாவு
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அப்பாவு நகர் அப்பர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரத்தில் இருந்து ஓரிக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேளிங்கைபட்டரை கீழ்ரோடு என்ற இடத்தில் சென்ற போது பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story