காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சீபுரம், 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், ஆன்மிக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு ஜெயலலிதா படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் 73 கிலோ அளவிலான பிரமாண்டமான கேக் வெட்டி வந்திருந்த பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 73 டன் அரிசி, 2 ஆயிரத்து 73 ஏழை பெண்களுக்கு காஞ்சி பட்டு சேலைகள் என 10,073 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மோகனசுந்தரம், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர், அரசு வக்கீல் அய்யம்பேட்டை கே.சம்பத், மகளிர் அணி நிர்வாகி பிரேமாமோகனசுந்தரம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் வி.அரிக்குமார், அ.தி.மு.க. நிர்வாகி காஞ்சி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் நடந்த விழாவுக்கு அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மாரி தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்க தலைவருமான எழிச்சூர் இ.வி. ராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு லத்தூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்ட அ.தி.முக. செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ராஜி, லத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சன் ஆகியோர் கிளை கழகங்களில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். செய்யூர் கூவத்தூர், காத்தான் கடை, முகையூர், கடுக்கப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கினார்கள். இதில் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதேபோல் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் அப்பாத்துரை தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசி தலைமையில் கிளை கழகங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. மதுராந்தகம் நகர கழக செயலாளர் ரவி தலைமையில் வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மலர்தூவி வணங்கினர். பின்னர் கூடி இருந்த திரளான அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, கே.ஆர்.தர்மன், தங்க பஞ்சாட்சரம், மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஜெய விஷ்ணு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கங்காதரன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் வில்வபதி, உத்திரமேரூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தணிகைவேல், திருவந்தவார் முருகன், பேரூராட்சி துணை செயலாளர் வி.டி.பொன்னுசாமி மாவட்ட பேரவை இணைச்செயலாளர் துரை பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story