திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா


திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 25 Feb 2021 9:14 PM IST (Updated: 25 Feb 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடந்தது.

திருவாரூர், 

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் பாலாஜி, ெரயில்பாஸ்கர், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூரில் முன்னாள் முதல்- அமைச்சர் ெஜயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் உதயகுமார், பொருளாளர் பாஸ்கரன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைப்போல கூத்தாநல்லூர் நகரின் பல பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் வல்லரசன், சொற்கோ, சாந்தி கோபாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர் செல்லப்பா, நகர இளைஞர் பாசறை செயலாளர் நெடுமாறன், வர்த்தக சங்க இணை செயலாளர் தோட்டச்சேரி முருகேசன், 5- வது வார்டு நிர்வாகி வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

வலங்கைமானில் முன்னாள் முதல்- அமைச்சர் ெஜயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சாந்தி தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அ.தி.மு.க.வினர் வலங்கைமான் ராமர் சன்னதி பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தனர். விழாவில் அ.தி.மு.க.வினர் வருகிற சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக ஜெயலலிதா படத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், ஒன்றிய விவசாய அணி தலைவர் மாத்தூர்குமார்

ஊராட்சி தலைவர்கள் செந்தமிழ்ச்செல்வி, முனுசாமி, ஜெகதீசன் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர். 

Next Story