மதுரையில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடின
மதுரை மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
மதுரை, பிப்.
மதுரை மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
வேலை நிறுத்தம்
தமிழக அரசின் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையிலும் அவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் பொன்மேனி, கோ.புதூர், எல்லீஸ் நகர் உள்பட 9 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து மொத்தம் 1,000 பஸ்கள் நகர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.
காலை 5 மணியில் இருந்து பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியேறும் பணி தொடங்கி விடும். ஆனால் நேற்று வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 900 பஸ்களில் மொத்தம் 400 பஸ்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அதாவது 40 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடின.
பாதிப்பு
மீதமுள்ள 60 சதவீத பஸ்கள் பணிமனையில் முடங்கி கிடந்தன. இந்த பஸ்கள் ஓடாததால் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக கிராம பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அனைத்து ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு பொது நோட்டீசு வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஊழியர்கள் இதனை பொருட்படுத்தவில்லை.
Related Tags :
Next Story