இருப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன
பயிற்சி-விழிப்புணர்வுக்காக இருப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன.
அரியலூர்:
வருகிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தேர்தலில் பணிபுரிய உள்ள அலுவலர்களின் பயிற்சிக்கும் மற்றும் வாக்காளர்களின் விழிப்புணர்வுக்காகவும் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு வைப்பறையில் இருந்து எடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திர இருப்பு அறையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் ரத்னா தலைமையில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அலுவலர்களின் பயிற்சிக்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த தலா 57 வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியில் எடுக்கப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திர இருப்பு அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story