ஒரகடம் அருகே 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
ஒரகடம் அருகே 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை,
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 38), இவரது மனைவி இலக்கியா (33). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தினேஷ் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வல்லம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இலக்கியா அடுக்கு மாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story