புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனுக்களை வாங்கி வருகின்றன. ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் மார்ச் 5 வரை விருப்பமனு அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமனு தாக்கலுக்கு பொது பிரிவினருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story