அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு, ரத்த கையெழுத்திடும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்்கு மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் அப்பாசாமி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story