மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Transport workers involved in the strike demonstrated

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 9 போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் தொ.மு.ச. சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ், சி.ஐ.டியூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமசாமி, காரல்மார்க்ஸ், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை சேர்ந்த சண்முகம், கஸ்தூரி, ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த சரவணன், குலோத்துங்கன், எச்.எம்.எஸ். சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோ‌‌ஷங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி தீர்வு காண காலஅவகாசம் அளித்தும் போக்குவரத்து துறை அமைச்சர் அலட்சியப்படுத்தியதன் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் போக்குவரத்து துறைஅமைச்சர் இடைக்கால நிவாரணமாக ரூ.1000 தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் அறிவித்து இருப்பது கண்துடைப்பாகும். எனவே போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகம், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க துணைத்தலைவர் துரை.மதிவாணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பணி நிறைவு சான்றிதழை உடனடியாக வழங்க வலியுறுத்தி எம்.பி.பி.எஸ். மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிறைவு சான்றிதழ் உடனடியாக வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறு ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 15 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களில் யாதவர்கள் இடம்பெறாததை கண்டித்து அகில இந்திய யாதவ மகாசபை அறக்கட்டளை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம்: தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.