பிரகதீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
மாசி மகத்தை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
மீன்சுருட்டி:
தீர்த்தவாரி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவிலின் முகப்பு பகுதியில் உள்ள திருக்குளத்தில் சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி நடந்தது. அப்போது சுவாமியை தொடர்ந்து பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் வழிபாடு
பின்னர் சூர்ணோத்சவம், யாகசாலை கலசங்கள் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இரவில் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கங்கை கொண்ட சோழபுரம், மீன்சுருட்டி மற்றும் ஜெயங்கொண்டத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு திருக்குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Related Tags :
Next Story