விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தொகையை அரசே ஏற்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
தமிழகம் முழுவதும் மொத்தம் 246 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு தூற்று கூலி, எடை போடுபவருக்கு கூலி, மற்ற செலவினங்கள் என ரூ.35 முதல் ரூ.40 வரை விவசாயிகளிடம் இருந்து கட்டாயமாக வாங்கப்பட்டு வருவதாகவும், இந்த கூலி தொகையை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல், நெல் மூட்டைகளை பெற கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் புனிதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தங்கையன், விவசாயிகள் ஒருங்கிணைப்பு மாவட்ட தலைவர் ஜெகநாதன், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கரும்பாயிரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் தொகையை தமிழக அரசே ஏற்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story