மதுரையில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு சிறப்பு ரெயில்


மதுரையில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 27 Feb 2021 2:22 AM IST (Updated: 27 Feb 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு சிறப்பு ரெயில்

மதுரை
மதுரையில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு சிறப்பு ரெயில் இயக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06002) வருகிற 1-ந் தேதி காலை 11.55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது. வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு திப்ரூகர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், பெர்காம்பூர், குர்தாரோடு, புவனேசுவர், கட்டாக், பலாசோர், ஹிசிலி, டாடாநகர், புரூலியா, ஜோய்சந்திபஹர், அசன்சால், அன்டால், துர்காபூர், சியூரி, ராம்புர்ஹத், பகுர், நியூ பராக்கா, மால்டா டவுன், பார்போம், கிசான்கஞ்ச், நியூஜல்பைகுரி, நியூ மயூநகுரி, துப்குரி, நியூ கூச்பேகர், நியூ அலிப்பூர்தார், பகிராகிராம், கோக்ராஜ்ஹர், நியூ பொங்கைகான், ராங்கியா, நியூ மிசமாரி, ரங்கபாரா வடக்கு, விஸ்வநரத் சிர்லி, ஹர்முடி, நார்த் லக்மிபூர், தேமாஜி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரெயிலில் ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 கார்டு பெட்டியுடன் இணைந்த சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ரெயில் ஒரேயொரு நாள் மட்டும் இயக்கப்படும் சிறப்பு ரெயிலாகும்.

Next Story