சென்னை கோட்டையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி


சென்னை கோட்டையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Feb 2021 5:56 PM IST (Updated: 27 Feb 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்டையில் விஷவாயு தாக்கி 2 பேர் மரணமடைந்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதன் பின்புறம் உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று காலை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 30), அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (40), வெங்கடேஷ் (29), மணிவண்ணன் (29), பன்னீர் செல்வம் (25) ஆகிய 5 பேர் ஈடுபட்டனர். அப்போது திடீரென அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 5 பேரும் மயக்கம் அடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தலைமை செயலக தீயணைப்பு படை வீரர்கள் மயக்கம் அடைந்த அனைவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். மீதம் உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story