ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக முனையத்துக்கு ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய நகரமான முனிச் பன்னாட்டு முனையத்தில் இருந்து பெரிய ரக சரக்கு விமானம் ஒன்று முதல் முறையாக வந்தது.
சென்னை விமான நிலையத்தில் அந்த சரக்கு விமானம் தரை இறங்கியதும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தின் மீது இருபுறங்களில் இருந்தும் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சரக்கு விமானத்தில் ஜெர்மனியில் இருந்து மொத்தம் 101 டன் எடையுள்ள பொருட்கள் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த விமானம் சென்னையில் இருந்து 96 டன் சரக்கு பொருட்களுடன் மீண்டும் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story