உலக சாதனை படைத்தவர்; இலங்கை யோகா போட்டியில் பங்கேற்க மாணவிக்கு கலெக்டர் நிதி உதவி
காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் படிக்கும் ரேஷ்மா எனும் மாணவி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த 72-வது குடியரசு தினத்தன்று 72 நிமிடங்களில் 72 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவிக்கு குளோபல் உலக சாதனை நிறுவனத்தால் இலங்கை நாட்டில் நடைபெற உள்ள யோகா போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மாணவியை அழைத்து போட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணம், போக்குவரத்து விமான கட்டணம், அயல்நாட்டு நுழைவு கட்டணம், உள்ளூர் போக்குவரத்து செலவினம், உணவு மற்றும் தங்குமிடம் கட்டணம் ஆகிய செலவினங்களுக்காக ரூ.35 ஆயிரத்துக்கான காசோலையை நிதியுதவியாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பா, பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் இயக்குனர் உமா மற்றும் மாணவிகள் மாணவி பெற்றோர் உள்ளனர்.
Related Tags :
Next Story