பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி


பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 27 Feb 2021 11:45 PM IST (Updated: 27 Feb 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி

தாமரைக்குளம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரியும், ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க மறுப்பதை கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரியலூர் பணிமனையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குறிப்பாக அரசுபோக்குவரத்துக்கழகங்களை நம்பி உள்ள பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்காததால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வரும்போதே பொதுமக்கள் முண்டியடித்து ஏறும் சூழ்நிலை உள்ளது.

Next Story