தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது சென்னை கலெக்டர் அறிவிப்பு


தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது சென்னை கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 9:05 AM IST (Updated: 28 Feb 2021 9:05 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது சென்னை கலெக்டர் அறிவிப்பு.

சென்னை, 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற திங்கட்கிழமை (மார்ச் 1-ந்தேதி) முதல் தேர்தல் நடத்தும் விதிமுறைகள் முடியும் வரை நடைபெறாது.

இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில் இட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story