மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி


மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 Feb 2021 9:17 AM IST (Updated: 28 Feb 2021 9:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகளிர் தினத்தையொட்டி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை தியாகராயநகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மகளிர் தின நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

இதில் பெண்களுக்காக ஏராளமான போட்டிகள், விற்பனை ஸ்டால்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த தொழில் முனைவோர் விருது, சமூக சேவை விருது, விவசாய புரட்சி செய்ததற்கான விருது மற்றும் எழுத்தாளருக்கான விருதும் வழங்கப்பட இருக்கிறது.

2 நாள் தொழில் பயிற்சி

மகளிர் தின விழாவுக்கு பின் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு 2 நாள் தொழில் பயிற்சி மற்றும் தொழில் தொடங்கும் விவரங்கள் போன்றவை எந்த வித கட்டணமுமின்றி நேரடியாக வழங்கப்பட உள்ளது. இதனை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மகளிர் தினத்துக்கு வருபவர்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ள கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய ஆண்ட்ராய்டு செல்போனில் form.wewatn.com/7358244511 என்பதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். தங்களுடைய பெயர், ஊர், செல்போன் எண் போன்ற விவரங்களை குறுந்தகவல் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் அனுப்பலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story