17 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இடமாற்றம் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு


17 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இடமாற்றம் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Feb 2021 10:13 AM IST (Updated: 28 Feb 2021 10:13 AM IST)
t-max-icont-min-icon

17 வட்டார போக்குவரத்து அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, 

நிர்வாக வசதிக்காக 17 வட்டார போக்குவரத்து அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜி.சுந்தரமூர்த்தி மீனம்பாக்கத்துக்கும், சென்னை தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பி.ஆர்.யுவராஜ் சோழிங்கநல்லூருக்கும், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரி ஏ.முக்கண்ணன் கடலூருக்கும், சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அதிகாரி பி.திருவள்ளுவன் சென்னை மேற்குக்கும், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அதிகாரி எம்.பி.காளியப்பன் திருப்பத்தூருக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அதிகாரி ஜி.அருணாச்சலம் சிதம்பரத்துக்கும், நாகை வட்டார போக்குவரத்து அதிகாரி டி.அறிவழகன் தஞ்சாவூருக்கும், ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி பி.பிரபாகர் அரியலூருக்கும், சென்னை வடக்கு அமலாக்க இணை போக்குவரத்து கமிஷனர் என்.ராமகிருஷ்ணன் வாணியம்பாடிக்கும், வேலூர் துணை போக்குவரத்து கமிஷனர் (அமலாக்கம்) கே.எஸ்.துரைசாமி ஓசூருக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

மீனம்பாக்கம்-ஸ்ரீரங்கம்

தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரி கே.பழனிசாமி பெரம்பலூருக்கும், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி பி.ஆனந்த் தென்காசிக்கும், மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி ஏ.குமாரா திருவண்ணாமலைக்கும், திருப்பூர் (வடக்கு) வட்டார போக்குவரத்து அதிகாரி ஆர்.குமார் ஸ்ரீரங்கத்துக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர் வட்டார போக்குவரத்து அதிகாரி என்.ஈஸ்வரமூர்த்தி வேலூர் துணை போக்குவரத்து கமிஷனராகவும் (அமலாக்கம்), மேட்டூர் வட்டார போக்குவரத்து அதிகாரி எம்.சேலையன் சென்னை வடக்கு அமலாக்க இணை போக்குவரத்து கமிஷனராகவும், அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஓ.எஸ்.வெங்கடேசன் விழுப்புரம் துணை போக்குவரத்து கமிஷனர் (அலுவலகம்) ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story