பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 12:02 AM IST (Updated: 1 March 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி சுதா(வயது 36). இவர் தினமும் தனது வயலுக்கு மாடுகள் ஓட்டி சென்று மேய்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதேபோல் நேற்று வழக்கம்போல் தனது வயலுக்கு மாடுகளை ஓட்டி சென்று மேய்த்துவிட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். 
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட சுதா சங்கிலியை பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கத்தியுள்ளார். 
அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தாலி சங்கிலியில் 5 பவுனை பறித்து சென்றனர். மீதம் உள்ள 2 பவுன் சுதாவின் கையில் சிக்கிக்கொண்டது. இந்த சம்வத்தால் சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story