மூடுபனியால் மறைந்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

மூடுபனியால் மறைந்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அதிகாலை முதல், காலை 8 மணி வரை பனி பெய்ததால் கோவில் முழுவதும் மறைந்தது. இதனால் காலை முதலே கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூடுபனியால் கோவில் மறைந்து இருப்பதை வியந்து பார்த்து சென்றனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கூடினர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையிலும் மூடுபனி பெய்ந்தால் வாகனங்களில் சென்றவர்கள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எறியவிட்டபடி சென்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோல் மூடுபனி பெய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தா.பழூர் பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8.15 மணி வரை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
Related Tags :
Next Story