தென்காசிக்கு வருகை தந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு
தென்காசிக்கு வந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசிக்கு வருகை தந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று மதியம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்திக்கு மாணவ-மாணவிகள் பாரம்பரிய சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்றனர்.
காமராஜர் சிலைக்கு மாலை
பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி பகுதிகளுக்கும் சென்று ராகுல்காந்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து ராகுல்காந்திக்கு வரவேற்பு அளித்தனர். ஏராளமானவர்கள் ராகுல்காந்தியுடன் கைக்குலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
கலந்து கொண்டவர்கள்
பிரசார நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தென்காசி மாவட்ட துணை தலைவர் சங்கை கணேசன், செங்கோட்டை முன்னாள் யூனியன் தலைவர் சட்டநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story