ஆடுகளை திருடிய 2 பேர் கைது


ஆடுகளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2021 2:40 AM IST (Updated: 1 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஆடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்மலைப்பட்டி,

அரியமங்கலத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆடுகள் திருடிய 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகரை சேர்ந்த வேலாயுதத்துக்கு (வயது 56) சொந்தமான 2 ஆடுகளை நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடி சென்றனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டிச்சென்று கையும் களவுமாக பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள், மேல அம்பிகாபுரம் திடீர் நகரை சேர்ந்த ஜாகீர் உசேன் (29), அஜய் (20) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story