ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் பேனர்கள், சுவரொட்டிகள்-கொடிக்கம்பங்கள் அகற்றம்


ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் பேனர்கள், சுவரொட்டிகள்-கொடிக்கம்பங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 10:23 PM GMT (Updated: 28 Feb 2021 10:23 PM GMT)

ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் பேனர்கள், சுவரொட்டிகள்- கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஆத்தூர்:
ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் பேனர்கள், சுவரொட்டிகள்- கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
பேனர்கள், சுவரொட்டிகள்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ஆத்தூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
இதேபோல நரசிங்கபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள் சுவரொட்டிகள் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் மற்றும் நகரசபை ஊழியர்கள்  அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
வாக்குவாதம்
இதனால் ஒரு சில பகுதிகளில் அரசியல் கட்சியினருக்கும், அகற்ற வந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story