பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
பத்ரகாளியம்மன் கோவில்
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கோவிலில் கொடியேற்றப்பட்டது. கோவிலின் திருவிழாவையொட்டி நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
இதற்காக பெண்கள் தீர்த்தம் எடுத்து வருவதற்காக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கிருந்து தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை நோக்கி சென்றனர். காவிரி ஆற்றில் தொடங்கிய ஊர்வலம் ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, மரப்பாலம் வழியாக கோவிலில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரம்
அபிஷேகம் நிறைவடைந்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு அக்னிகபாலம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலையில் குண்டம் விழா நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story