சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2021 9:29 AM IST (Updated: 1 March 2021 9:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலியானார். அவரது குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர், 

சென்னை திருவல்லிக்கேணி கற்பகம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 50). இவர், சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் துறைமுகத்துக்குள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்மணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான கொளத்தூர் சக்தி நகரை சேர்ந்த சரவணன் (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் 50 பேர், பலியான தமிழ்மணி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்ககோரி துறைமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துறைமுக அதிகாரிகள், பலியான தமிழ்மணி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறைமுக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story