சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது; போக்சோ சட்டத்தில் நடவடிக்கை


சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது; போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 March 2021 5:36 PM IST (Updated: 1 March 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஆவடியை சேர்ந்த 15 வயது சிறுமி, அவரது பெற்றோர் வெளியே சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்தார்.

பின்னர் அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமி மாயமாகி இருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், தங்கள் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆவடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஆவடி நந்தவனமேட்டூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்ற ஞானபிரகாஷ் (வயது 20) என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தனது வீட்டுக்கு கடத்திச் சென்று அவருக்கு கட்டாய தாலிகட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், இது தொடர்பாக ஞானபிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 More update

Next Story