மாமல்லபுரம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 61 லட்சத்துக்கு வாகன வரி வசூல் ஏலம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
இங்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பல்லவன் சிலை அருகிலும், பூஞ்சேரி நுழைவு வாயில் பகுதியிலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டண மையங்களில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் தனியாருக்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்படுவது வழக்கம். இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 13 மாதத்திற்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க மாமல்லபுரம் பேரூராட்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் சீனிவாசன் என்பவர் ரூ.1 கோடியே 61 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இதையடுத்து நாளை முதல் (திங்கட்கிழமை) மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு வரி வசூலிக்க அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story