கும்மிடிப்பூண்டி அருகே மின் கசிவால் இறைச்சிக்கடைக்காரர் குடிசை வீடு எரிந்து சாம்பல்
கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு கிராமத்தில் கோழி இறைச்சிக்கடை குடிசை வீடு எரிந்து சாம்பலானது.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு கிராமத்தில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருபவர் அய்யப்பன் (வயது 32). இவர் நேற்று வீட்டில் இல்லாத போது, வீட்டின் கூரையையொட்டி மேலே செல்லும் மின் கம்பிகளில் ஏற்பட்ட திடீர் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ.18 ஆயிரம், 50-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலானது.இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story