எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கியை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம்


எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கியை மகளிர் சுயஉதவிக்குழுவினர்  முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2021 9:31 PM IST (Updated: 1 March 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கியை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கியை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி நடந்த அரசு விழாவில் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனத்தை சேர்ந்த 6 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனாக ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.  ஆனால் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் காசோலைக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இந்த நிலையில் எட்டயபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, காசோலைக்கான ஆவணங்கள் இளம்புவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து கடந்த 16-ந் தேதி தான் வந்தது. அதனால் தற்போது உங்களுக்கு பணம் வழங்குகிறோம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு ஜனவரி 21-ந் தேதி கணக்கில் தான் காசோலைக்கு பணம் வேண்டும். அப்போது, தான் அரசு தள்ளுபடியில் அது சேரும் என்று தெரிவித்தனர். 

கலெக்டரிடம் முறையிட...

பின்னர் இளம்புவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பழைய தேதியிட்டு பணம் தரமுடியாது என்று சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழுவினர் இந்த பிரச்சிைன சம்பந்தமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிடுவோம் என்று கூறி கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story