தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனம்  கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 March 2021 4:51 PM GMT (Updated: 1 March 2021 4:51 PM GMT)

தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி  நடந்தது. 

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story