துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 1 March 2021 4:55 PM GMT (Updated: 1 March 2021 4:55 PM GMT)

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

கோவை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் கோவைக்கு வந்து உள்ளனர். தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

பொதுமக்கள் இடையே அச்சத்தை போக்கவும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. 

அதன்படி கோவை ரத்தினபுரியில் நேற்று துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கோவை மாநகர போலீசார் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு இட்டேரியில் உள்ள புதுப்பாலம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமை தாங்கினார். துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கைகளில் துப்பாக்கிகளுடன் அணிவகுத்து வந்தனர்.

 அதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story