திருவாரூரில் போலீஸ் துணை ராணுவம் அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூரில் போலீஸ்-துணை ராணுவம் அணிவகுப்பு நடந்தது.
திருவாரூர்:
சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூரில் போலீஸ்-துணை ராணுவம் அணிவகுப்பு நடந்தது.
போலீஸ், துணை ராணுவம் அணிவகுப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான நன்னடத்தை நடைமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் 91 பேர் நேற்று திருவாரூர் வந்தனர். இந்தநிலையில் திருவாரூரில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் போலீஸ்-துணை ராணுவம் அணிவகுப்பு நேற்று நடந்தது.
திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை, போலீசார் அணிவகுத்து ஊர்வலமாக வந்தனர்.
அச்சமின்றி வாக்களிக்க
திருவாரூர் நகரின் முக்கிய சாலை வழியாக சென்று தெற்கு வீதி நகராட்சி அலுவலகத்தை அடைந்து நிறைவு பெற்றது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை சூப்பிரண்டுகள் தினேஷ்குமார், சலீம் ஜாவித், திருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தலில் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தவும் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story