பல்லடம் அருகே மரக்கன்று நட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


பல்லடம் அருகே மரக்கன்று நட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 March 2021 6:20 PM GMT (Updated: 1 March 2021 6:20 PM GMT)

பல்லடம் அருகே மரக்கன்று நட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம், :-
 பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி காளிவேலம்பட்டி பகுதியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கால்நடை துறைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் மந்தை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த இடத்தில் வனம் பவுண்டேசன் நிறுவனத்தின் மூலம் "பொக்லைன்" எந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கேட்டபொழுது. மரக்கன்றுகள் நடுவதற்கு இடத்தை சுத்தப்படுத்தவதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காளிவேலம்பட்டி - பல்லடம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த பல்லடம் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், வருவாய் ஆய்வாளர் பாலவிக்னேஷ், சுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சாந்தஷிலா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள் அந்த இடத்தை தனியார் அமைப்புக்கு வழங்கக்கூடாது. பொதுமக்கள் பயன்படும் வகையில் பள்ளி, மற்றும் பிற பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என கூறினர். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் உங்களது கோரிக்கை எடுத்துச்சென்று கூறுகிறோம், என அதிகாரிகள் கூறியதையடுத்து சுமார் 40 நிமிடம் நடந்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

Next Story