துணை ராணுவ படை புதுக்கோட்டை வந்தது


துணை ராணுவ படை புதுக்கோட்டை வந்தது
x
தினத்தந்தி 1 March 2021 6:23 PM GMT (Updated: 1 March 2021 6:23 PM GMT)

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை வீரர்கள் புதுக்கோட்டைக்கு வந்தனர்.

புதுக்கோட்டை, மார்ச்.2-
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை வீரர்கள் புதுக்கோட்டைக்கு வந்தனர்.
துணை ராணுவ படை
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படை வீரர்கள் முதற்கட்டமாக தமிழகம் வந்தனர். அந்த வகையில் லக்னோவில் இருந்து துணை ராணுவ படை வீரர்கள் ஈரோட்டிற்கு வந்தனர். ஈரோட்டில் இருந்து துணை ராணுவ படை வீரர்கள் உதவி கமாண்டண்ட் கீர்த்தி வரதன் தலைமையில் 92 பேர் நேற்று அதிகாலை புதுக்கோட்டை வந்தனர். புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஆண் காவலர்கள் தங்கும் அறையில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3 கம்பெனிகள் வருகை
புதுக்கோட்டை வந்த துணை ராணுவ படை வீரர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்களுடன் பணி மேற்கொள்ள உள்ளனர். மேலும் சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும். தற்போது வந்துள்ள துணை ராணுவப்படையினருடன் மேலும் 3 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவ படையினர் புதுக்கோட்டை வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Next Story