புன்னம்சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான்


புன்னம்சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான்
x
தினத்தந்தி 2 March 2021 12:05 AM IST (Updated: 2 March 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

புன்னம்சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான்.

நொய்யல்
புன்னம் சத்திரம் அருகே உப்புப்பாளையம் பிரிவு ரோடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று பெரிய புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, புள்ளிமானை பிடிக்க காட்டை சுற்றி வலை விரித்தனர். இருப்பினும் புள்ளிமான் வலை தாண்டி துள்ளி, குதித்து காட்டுப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டது. இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் அந்த புள்ளி மான் எங்கிருந்து வந்தது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story