தலைவர்கள் சிலைகளை மறைக்க பயன்படுத்தப்பட்ட விலையில்லா வேட்டி, சேலை

தலைவர்கள் சிலைகளை மறைக்க விலையில்லா வேட்டி, சேலை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரியலூரில் பஸ் நிலையம் அருகே உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதில் சிலைகளை மறைப்பதற்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி, சேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு சேலைகள், வேட்டிகள் வழங்கியதில் முறைகேடு எதுவும் உள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






