ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு
x
தினத்தந்தி 2 March 2021 1:10 AM IST (Updated: 2 March 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு பேரவையினர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில், வருகிற 10-ந் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளித்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்வதாகவும், கூறியிருந்தனர். பின்னர் அந்த மனுவை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

Related Tags :
Next Story