மூலைக்கரைப்பட்டி அருகே 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

மூலைக்கரைப்பட்டி அருகே 2-வது நாளாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இட்டமொழி, மார்ச்:
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முக்குலத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், மூலைக்கரைப்பட்டி அருகே ஆனையப்பபுரம், புதுக்குறிச்சி, ஆழ்வாநேரி, கோவைகுளம் ஆகிய ஊர்களில் பசும்பொன் தேசிய கழகத்தினர் நேற்று முன்தினம் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து அவர்கள் நேற்று 2-வது நாளாகவும் வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story