தாய் தாக்கப்பட்டதால் மகள் தூக்குப்போட்டு தற்கொலை


தாய் தாக்கப்பட்டதால் மகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2021 2:07 AM IST (Updated: 2 March 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

தாய் தாக்கப்பட்டதால் மகள் தூக்குப்போட்டு தற்கொலை

கே.கே.நகர்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி (வயது 37). மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகனின் மனைவி பூமாரி இதுபற்றி செல்வியின் மூத்த மகனிடம், தாயாரை கண்டித்து வைக்கும்படி கூறியுள்ளார். அவர் செல்வியின் தாய், சரசுவிடம் கூறியுள்ளார். சரசு இதுபற்றி பூமாரியிடம் தட்டிக் கேட்க சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் சரசுவை பூமாரியின் அண்ணன் பொன்மாரி தாக்கினார். தனது தாய் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மனமுடைந்த செல்வி நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story