சேலத்தில் ரூ.3½ லட்சம் வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல்


சேலத்தில் ரூ.3½ லட்சம் வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2021 9:22 PM GMT (Updated: 1 March 2021 9:22 PM GMT)

சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3½ லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் ரூ.3½ லட்சம் வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல்
சேலம்:
சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3½ லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், சேலம் மேற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படை 3-வது குழுவை சேர்ந்த பிரபாகரன், சாஜிதா பேகம் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் நேற்று கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், முலாம் பூசாத வெள்ளிக்கொலுசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல்
இதுகுறித்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரித்தபோது, அவர் தளவாய்ப்பட்டியை சேர்ந்த ஏழுமலை என்பதும், அவர் வெள்ளிக்கொலுசு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருவதும், தளவாய்ப்பட்டியில் இருந்து சிவதாபுரத்திற்கு மெருகு ஏற்றுவதற்காக வெள்ளிக்கொலுசுகள் கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து 4 கிலோ 80 கிராம் கொண்ட வெள்ளிக்கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது குறித்து வெள்ளி வியாபாரி ஏழுமலையிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story