சேலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை


சேலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 March 2021 3:03 AM IST (Updated: 2 March 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே, ஒரேநாளில் ரூ.35 லட்சம் நகைக்கடன் வழங்கியதாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலம் அருகே, ஒரேநாளில் ரூ.35 லட்சம் நகைக்கடன் வழங்கியதாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
சேலம் அருகே வலசையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. வலசையூர், பள்ளிப்பட்டி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை திடீரென கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.
ரூ.35 லட்சம் நகைக்கடன்
அதற்கு அவர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். ஆனால் கடந்த 25-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 34 பேருக்கு ரூ.35 லட்சம் அளவுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் இவ்வளவு பேருக்கு எப்படி நகைக்கடன் வழங்க முடியும்? என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வங்கியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், முறையாக தான் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சேலம் அருகே கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story