கெங்கவல்லி அருகே சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வெல்டிங் கடைக்காரர்
கெங்கவல்லி அருகே சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வெல்டிங் கடைக்காரரை போலீசார் பாராட்டினர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வெல்டிங் கடைக்காரரை போலீசார் பாராட்டினர்.
சாலையில் கிடந்த பணம்
கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் வசிப்பவர் பொன்னம்பலம். இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் இருந்து வீட்டுக்கு மதியம் சாப்பிட வந்தபோது ஹேண்ட்பேக் ஒன்று சாலையில் கிடந்தது.
அந்த பையை எடுத்து பார்த்தபோது ரூ.50 ஆயிரம் மற்றும் துணிகள் இருந்தன. பின்னர் அந்த பை கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பையை பார்த்தபோது பாஸ்போர்ட்டு இருந்தது. அந்த பாஸ்போர்ட்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தச்சூர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவருடைய முகவரி இருந்தது.
ஒப்படைப்பு
அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருவதும், இவர் ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது கைப்பை தவறி விழுந்து உள்ளது எனவும் தெரியவந்தது.
இதையடுத்து கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் முருகன் அந்த பணத்தை அவரிடம் ஒப்படைத்தார். இதற்காக பொன்னம்பலத்தை இன்ஸ்பெக்டர் மற்றும் பலர் பாராட்டினர்.
Related Tags :
Next Story