நெலாக்கோட்டை அருகே காட்டு யானை இறந்தது


நெலாக்கோட்டை அருகே காட்டு யானை இறந்தது
x
தினத்தந்தி 2 March 2021 12:02 PM IST (Updated: 2 March 2021 12:04 PM IST)
t-max-icont-min-icon

நெலாக்கோட்டை அருகே காட்டு யானை இறந்தது.

பந்தலூர்,

பந்தலூர் அருகே பிதிர்காடு வனப்பகுதியில் காட்டு யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் பிதிர்காடு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அவர்கள் நெலாக்கோட்டை அருகே சசக்ஸ் தனியார் தோட்டப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் ஒரு ஆண் காட்டு யானை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். 

உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

இறந்த யானைக்கு 16 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story